உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சினிமாவை 3 ரகமாக பிரித்து சம்பளம் நிர்ணயிக்க முடிவு

சினிமாவை 3 ரகமாக பிரித்து சம்பளம் நிர்ணயிக்க முடிவு


சினிமாவின் அனைத்து சங்கங்களும் இணைந்த சினிமா சங்க கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டம் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜி.கே.எம். தமிழ்க்குமரன் தலைமையில் நடந்தது. தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன தலைவர் திரு.ஆர்.கே.செல்வமணி முன்னிலை வகித்தார்.

சம்மேளனத்தில் இணைக்கப்பட்டுள்ள 23 சங்கங்களின் தலைவர், செயலாளர்கள் கலந்து கொணடனர். சங்கத்தின் முன்னாள் தலைவர் கலைப்புலி எஸ்.தாணு, துணைத்தலைவர் கமலக்கண்ணன் செயலாளர்கள் கதிரேசன், ஆர். ராதாகிருஷ்ணன், பொருளாளர் சுபாஷ் சந்திர போஸ், இணைச் செயலாளர் சுஜாதா விஜயகுமார், தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர் டி.சிவா, பொருளாளர் தனஞ்செயன் இயக்குனர்கள் சங்கத் தலைவர் ஆர்.வீ.உதயகுமார், செயலாளர் பேரரசு ஆகியோர் கலந்துகொண்டார்கள்..

இக்கூட்டத்தில் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு குறித்து ஆலோசிக்கப்பட்டது. முடிவில் பல முடிவுகள் எடுக்கப்பட்டது. குறிப்பாக தயாரிப்பாளர்கள், தொழிலாளர்கள் பாதிக்காத வண்ணம், தமிழ்த் திரையுலகில் புதிய முயற்சியாக, சிறிய, மத்திமம், பெரிய பட்ஜெட் என்று மூன்று வகையாக பிரித்து அதற்குரிய சம்பளம் வழங்க அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து முடிவு செய்து நடைமுறைபடுத்த திட்டமிட்டுள்ளனர். இந்த சம்பள வித்தியாசம் செட் அசிஸ்டெண்ட் முதல் முன்னணி நடிகர்கள் வரைக்கும் பொருந்தும் என்று கூறியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !