உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'இருளன்' படப்பிடிப்பில் அருண் விஜய் காயம்

'இருளன்' படப்பிடிப்பில் அருண் விஜய் காயம்

அருண் விஜய் கதாநாயகனாக நடிக்கும் 'இருளன்' படத்தை இயக்கி வருகிறார் முத்தையா. இவர்கள் இருவரும் முதன்முறையாக இணைந்து பணியாற்றும் படம் இது. சமீபத்தில் இப்படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியான நிலையில், இதன் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. இந்த பட படப்பிடிப்பில் சண்டை காட்சிகள் படமாக்கப்பட்ட போது எதிர்பாராத விதமாக அருண் விஜய்யின் கால் நரம்பு பகுதியில் அடிபட்டு காயம் ஏற்பட்டுள்ளது. இந்த தகவலை நடிகர் அருண் விஜய் வெளியிட்டுள்ளார்.

மேலும், காயங்கள் காரணமாக வழக்கமாக உடற்பயிற்சி மற்றும் வேலைகளில் தடை ஏற்படுவது மிகவும் வருத்தம் அளிக்கிறது; இருளன் படப்பிடிப்பின் போது எனது தொடை தசை பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது, தற்போது அதற்கான சிகிச்சையில் ஈடுபட்டு வருகிறேன்; விளையாட்டில் இதெல்லாம் சகஜம் தான், இன்னும் பலமாக திரும்புவேன் என்று கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !