உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'இருமுடி' படத்திற்கு எதிராக ஆந்திர ஆசிரியர்கள் கொதிப்பு

'இருமுடி' படத்திற்கு எதிராக ஆந்திர ஆசிரியர்கள் கொதிப்பு

சிவா நிர்வானா இயக்கத்தில் ஜிவி பிரகாஷ்குமார் இசையில், ரவி தேஜா, பிரியா பவானி சங்கர் மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான தெலுங்குப் படம் 'இருமுடி'. இப்படம் தமிழில் 'இருமுடி கட்டு' என்ற பெயரிலும் வெளியாகி உள்ளது.

இதில் வில்லனாக எம்எல்ஏ கதாபாத்திரமும், அவரது ஆசையை தீர்த்துக் கொள்ள பள்ளி மாணவிகளை ஏற்பாடு செய்யும் ஆசிரியை கதாபாத்திரமும் இடம் பெற்றுள்ளது.

படத்தில் இடம் பெற்றுள்ள ஆந்திர அரசு பள்ளி ஒன்றின் பெயர்ப் பலகை தெளிவாகத் தெரியும்படி இடம் பெற்றுள்ளது. அரசு பள்ளி மாணவிகளை, ஆசிரியர்களை தவறாகக் காட்டும் காட்சிகள் படத்தில் இடம் பெற்றுள்ளது எனவும், அவற்றை உடனடியாக நீக்க வேண்டும் என்றும் ஆந்திர மாநில ஆசிரியர்கள் கூட்டமைப்பு கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.

இந்தக் காட்சிகள் மூலம் மக்கள் மத்தியில் அரசுப் பள்ளிகள், அரசு ஆசிரியர்கள், அரசு மாணவர்கள் பற்றிய தவறான புரிதல் ஏற்படும் என்றும் கூறியுள்ளது.

இது குறித்து படக்குழுவினர் இதுவரையில் எந்த பதிலையும் அளிக்கவில்லை. படம் மக்கள் வரவேற்பைப் பெற்று 100 கோடி வசூலைத் தொட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !