உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'பெத்லகேம் குடும்ப யூனிட்' படத்தின் தமிழ் டிரைலர் வெளியானது!

'பெத்லகேம் குடும்ப யூனிட்' படத்தின் தமிழ் டிரைலர் வெளியானது!


மலையாளத்தில் கிரிஷ் ஏ.டி. இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'பெத்லகேம் குடும்ப யூனிட்'. இப்படத்தில் நிவின் பாலி, மமிதா பைஜூ ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி வெளியான இப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த படம், வெளியாகி 8 நாட்களில் 172 கோடி வசூல் செய்திருப்பதாகப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. காதல் மற்றும் நகைச்சுவை கலந்த கதைக் களத்தில் உருவாகியுள்ள இந்த பெத்லகேம் குடும்ப யூனிட் படம் தமிழிலும் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியாகிறது.

வருகிற செப்டம்பர் 4ம் தேதி தமிழில் இப்படத்தை வெளியிடுகிறார்கள். இந்த நிலையில் இந்த பெத்லகேம் குடும்ப யூனிட் படத்தின் தமிழ் டிரைலர் இன்று சோசியல் மீடியாவில் வெளியிடப்பட்டு வைரலாகி வருகிறது. விஷ்ணு விஜய் இசையமைத்துள்ள இப்படத்தை பகத் பாசில், திலீஷ் போத்தன் மற்றும் ஷ்யாம் புஷ்கரன் ஆகியோர் இணைந்து பாவனா ஸ்டுடியோஸ் சார்பில் தயாரித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !