உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / போலி ஆபாச வீடியோ : ஷாலினி பாண்டே வேதனை

போலி ஆபாச வீடியோ : ஷாலினி பாண்டே வேதனை

விஜய் தேவரகொண்டா உடன் அர்ஜுன் ரெட்டி படத்தில், நாயகியாக தெலுங்கில் அறிமுகமானவர் ஷாலினி பாண்டே. தொடர்ந்து தமிழ், ஹிந்தி படங்களிலும், தனுஷ் உடன், 'இட்லி கடை' படத்தில் இரண்டு நாயகியரில் ஒருவராகவும் நடித்திருந்தார்.

சமீபத்தில் ஷாலினி பாண்டேயின் மேலாடையின்றி எடுக்கப்பட்ட படம் மற்றும் வீடியோ வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தது. இது நிஜம்தானா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில் அது போலியானது என ஷாலினி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், ‛‛ஏஐ தொழில்நுட்பம் இப்படி தவறாக பயன்படுத்தப்படுவது அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. பெண்களை குறிவைத்து இப்படி போலி ஆபாச வீடியோக்கள் பரப்படுவது கவலை அளிக்கிறது, கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற வீடியோக்களை பதிவிறக்கமோ, மற்றவர்களுக்கு பகிரவோ வேண்டாம். மாறாக அதனை ரிப்போர்ட் செய்ய வேண்டும்'' என குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !