உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / வலி, போராட்டாங்களை கடந்து 100வது படத்திற்கு வந்திருக்கிறேன் : சாம் சி.எஸ் நெகிழ்ச்சி

வலி, போராட்டாங்களை கடந்து 100வது படத்திற்கு வந்திருக்கிறேன் : சாம் சி.எஸ் நெகிழ்ச்சி

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள 'சர்தார் 2' படம் இசை அமைப்பாளர் சாம் சி.எஸ்-க்கு 100வது படம். படத்தின் பாடல் வெளியீட்டு விழாவிற்கு வந்த அவர், இதுகுறித்து நிருபர்களிடம் கூறியதாவது...

பல வருடங்கள், பல போராட்டங்களை, வலிகளைக் கடந்து என்னுடைய 100-வது படத்திற்கு வந்திருக்கிறேன் என்பதை நினைக்கும்போது மிகவும் உணர்ச்சி வசப்படுகிறேன். நான் கடந்து வந்த பாதையில் நிறைய நன்மைகளும் சவால்களும் இருந்திருக்கின்றன. மிகவும் உற்சாகமாகவும் அதேசமயம் மனதிற்குள் ஒரு எமோஷனலான உணர்வோடும் இருக்கிறேன்.

இந்த 100-வது பட விழா எனக்கு சிறப்பு வாய்ந்தது. இந்தத் தருணத்தில் என்னோடு பயணித்த, எனக்கு உதவிய திரைப்படம் சார்ந்த மனிதர்கள், சொந்தங்கள், ஊடக நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த 99 படங்களாக ரசிகர்கள் எனக்குக் கொடுத்த ஆதரவு மிகப்பெரியது. எனது பின்னடைவுகளின் போதும் ரசிகர்கள் அனைவரும் என் கூடவே இருந்திருக்கிறார்கள். இந்த 100-வது படம் என்ற மைல்கல், நான் இன்னும் பல நல்ல படங்களை உருவாக்குவதற்கான பெரிய ஊக்கமாக இருக்கும்.

விக்ரம் வேதா, கைதி படங்கள் எப்படி இசையமைப்பில் பேசப்பட்டதோ, அதேபோல் இந்தப் படமும் பேசப்படும். இதற்காக புடாபெஸ்ட் நகரில் லைவ் ஆர்கெஸ்ட்ரா மற்றும் பல கலைஞர்களுடன் இணைந்து மிகக் கடுமையாக உழைத்திருக்கிறோம். 100 என்பது வெறும் எண்தான், இன்னும் நிறைய கற்றுக்கொண்டு அனைவருக்கும் பிடிக்கும் வகையிலான சிறந்த இசையைத் தொடர்ந்து வழங்குவேன். என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !