250 கோடி வசூலைக் கடந்த 'பெத்லகேம் குடும்ப யூனிட்'
கிரிஷ் எ.டி. இயக்கத்தில், நிவின் பாலி, மமிதா பைஜூ மற்றும் பலர் நடிப்பில் ஆகஸ்ட் 21ம் தேதி வெளியான மலையாளத் திரைப்படம் 'பெத்லகேம் குடும்ப யூனிட்'. வெளியான 6 நாட்களிலேயே இப்படம் 100 கோடி வசூலைக் கடந்தது.
கடந்த வாரம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் டப்பிங் ஆகி வெளியான இப்படம் தற்போது 250 கோடி வசூலைக் கடந்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கேரளாவில் மட்டுமே 110 கோடி வசூலைக் கடந்துள்ளது. வெளிநாடுகளில் 120 கோடிக்கும் அதிகமாகவும், இதர மாநிலங்களில் 20 கோடியும் வசூலித்துள்ளதாகச் சொல்கிறார்கள்.
2026ம் ஆண்டில் வெளியான மலையாளத் திரைப்படங்களில் அதிக வசூலைப் பெற்ற ஒரு படமாக இருக்கிறது. அது மட்டுமல்ல 200 கோடி மற்றும் 250 கோடியை மிக விரைவில் பெற்று சாதனை படைத்துள்ளது.
இதுவரையில் வெளியான மலையாளப் படங்களில் அதிக வசூலைக் குவித்த படங்களில் தற்போது 3வது இடத்தைப் பிடித்துள்ளது. முதலிடத்தில் 2025ல் வெளியான 'லோகா' படம் 300 கோடியுடனும், இரண்டாமிடத்தில் அதே ஆண்டில் வெளியான 'எல் 2 எம்புரான்' 260 கோடியுடனும் உள்ளன. இந்த இரண்டு வசூலையும் முறியடித்து நம்பர் 1 இடத்திற்கு 'பெத்லகேம் குடும்ப யூனிட்' செல்லுமா என்பது கூடிய விரைவில் தெரிய வரும்.