உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இளையராஜா, ராமராஜன் கூட்டணியில் இத்தனை படங்களா?

இளையராஜா, ராமராஜன் கூட்டணியில் இத்தனை படங்களா?

புதுமுக இயக்குனர் காசிமாயன் இயக்கும் ‛கடவுள் தந்த பரிசு' படத்தில் இளையராஜா, ராமராஜன் வெற்றி கூட்டணி மீண்டும் இணைகிறது. இந்த படத்தில் கோவை சரளா, செந்திலும் நீண்ட இடைவெளிக்குபின் ராமராஜனுடன் இணைந்து பணியாற்றுகிறார்கள். திரையுலகில் தனது 50வது வருடத்தில் இளையராஜா பயணம் செய்யும் காலத்தில் இந்த படம் உருவாகிறது. ராமராஜன் பட வெற்றிக்கு இளையராஜா இசை, பாடல்களும் ஒரு முக்கியமான காரணம் என்று கூறப்படுவது உண்டு. இந்த நிலையில் இளையராஜா ராமராஜன் கூட்டணியில் உருவான மற்ற 24 படங்களின் பட்டியலை படக்குழு வெளியிட்டுள்ளது. அவை...

1. எங்க ஊரு பாட்டுக்காரன்
2. கிராமத்து மின்னல்
3. செண்பகமே செண்பகமே
4. ராசாவே உன்ன நம்பி
5. பார்த்தால் பசு
6. என்னை விட்டுப் போகாதே
7. எங்க ஊரு காவக்காரன்
8. என்னைப் பெத்த ராசா
9. பொங்கி வரும் காவேரி
10. எங்க ஊரு மாப்பிள்ளை
11. கரகாட்டக்காரன்
12. ராஜா ராஜாதான்
13. அன்புக் கட்டளை
14. தங்கமான ராசா
15. பாட்டுக்கு நான் அடிமை
16. ஊரு விட்டு ஊரு வந்து
17. புதுப்பாட்டு
18. ஊரெல்லாம் உன் பாட்டு
19. பொண்ணுக்கேத்த புருஷன்
20. வில்லுப் பாட்டுக்காரன்
21. தேடி வந்த ராசா
22. தெம்மாங்கு பாட்டுக்காரன்
23. அண்ணன்
24. சாமானியன்
25. கடவுள் தந்த பரிசு


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !