150ஐக் கடந்த 2026ன் வெளியீடுகள்
தமிழ் சினிமா வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரே ஆண்டில் அதிகப் படங்கள் வெளிவந்த ஆண்டாக கடந்த 2025ம் வருடம் இருந்தது. கடந்த ஆண்டில் மட்டும் 280க்கும் மேற்பட்ட நேரடி தமிழ்ப் படங்கள் வெளியாகின.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த ஆண்டில் ஆகஸ்ட் மாதம் முடிவில் 175க்கும் அதிகமான படங்கள் வெளியாகின. இந்த ஆண்டில் ஆகஸ்ட் மாதம் முடிவில் 140க்கும் அதிகமான படங்கள் மட்டுமே வெளியாகி இருந்தன. சுமார் 35 படங்கள் வரை குறைவு.
இந்நிலையில் கடந்த வாரம் செப்டம்பர் 4ம் தேதி வெளியான படங்களுடன் சேர்த்து இந்த ஆண்டில் வெளியான நேரடி தமிழ்ப் படங்களின் எண்ணிக்கை 150ஐக் கடந்துள்ளது.
இதில் அதிக வசூல் படமாக 'கருப்பு' படம் 340 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. 'ஜனநாயகன்' படம் 300 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது என்று சொல்லப்படுகிறது. அதற்கடுத்து 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படம் 240 கோடியை வசூலித்துள்ளது. 'டிசி, பராசக்தி' ஆகிய படங்கள் 100 கோடி வசூலைக் கடந்தன. 150 படங்களில் 5 படங்கள் மட்டுமே 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது.
50 கோடி வசூலைக் கடந்து நல்ல லாபத்தையும் கொடுத்த படங்களாக, “தாய் கிழவி, பிளாஸ்ட், யூத், கட்டா குஸ்தி 2' ஆகிய படங்கள் இருந்தன.