உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக்: தமிழ் படத்தில் ஒரே ஒரு காட்சியில் அறிமுகமான மோகன்லால்

பிளாஷ்பேக்: தமிழ் படத்தில் ஒரே ஒரு காட்சியில் அறிமுகமான மோகன்லால்


மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் 'இருவர்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன் பிறகு அவர் பல படங்களில் நடித்திருந்தாலும் அவர் நடித்த முதல் தமிழ் படம் 'கோபுர வாசலிலே'. இந்த படத்தை அவரது நண்பரும், மோகன்லாலை வைத்து அதிக படங்களை இயக்கியவருமான பிரியதர்ஷன் இயக்கியதால் நட்புக்காக படத்தின் நாயகனுடன் 'கேளடி என் பாவையே' என்ற பாடலில் ஒரு காட்சியில் அக்கார்டியனை இசைத்துக் கொண்டே அவர் கார்த்திக் மற்றும் பானுப்பிரியாவுடன் ஆடினார். மோகன்லாலை தமிழில் அறிமுகப்படுத்தும் ஆசையில் இருந்த பிரியதர்ஷன் இந்த காட்சியை எடுத்தார்.

இந்த படத்தில் கார்த்திக், பானுப்ரியாவுடன் சுசித்ரா, நாசர், ஜனகராஜ், சார்லி உள்ளிட்ட பலர் நடித்தனர். இளையராஜா இசை அமைத்திருந்தார். நண்பர்கள் நான்கு பேர் நாயகன் கார்த்திக்கை பானுப்ரியா காதலிப்பதாக சொல்லி ஏமாற்றுவதுதான் படத்தின் கதை. கமல் இயக்கத்தில் சீனிவாசன், ரேகா நடித்த 'பாவம் பாவம் ராஜகுமாரன்' என்ற படத்தின் ரீமேக்தான் 'கோபுர வாசலிலே' படம். காமெடி, காதல் கலந்த இந்த படம் 100 நாட்கள் ஓடி வெற்றி பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !