உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக் : ஒரே படத்தில் வாய்ப்பை தவற விட்ட நாயகன், நாயகி

பிளாஷ்பேக் : ஒரே படத்தில் வாய்ப்பை தவற விட்ட நாயகன், நாயகி

அந்தக் காலத்தில் ஏவிஎம் படங்களில் நடிப்பவர்கள் என்றால் அவர்கள் புதுமுகமாக இருக்க வேண்டும். அவர்களின் திறமையை பரிசோதித்து அவர்களை ஏவிஎம் செட்டியார் நடிக்க வைப்பார். அல்லது ஏற்கெனவே திறமை காட்டி இருப்பவர்களை தனது படத்திற்கு தேர்வு செய்தார். ஏவிஎம் ஸ்டூடியோவிற்குள் நுழைந்தவர்களும், ஏவிஎம் படத்தில் நடித்தவர்களும் புகழ்பெற்று விடுவார்கள் என்ற கணிப்பு அப்போது இருந்தது.

ஆனால் அதையும் உடைத்த நிகழ்வுகள் உண்டு. அதற்கு உதாரணம் 'வீரத்திருமகன்' படம். குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த சச்சு, இந்த படத்தின் மூலம் நாயகி ஆனார். 'விஜயபுரிவீரன்' என்ற மிகக்பெரிய வெற்றிப் படத்திற்கு பிறகு சி.எல்.ஆனந்தன் இதில் நாயகனாக நடித்தார். 'வெற்றித்திருமகன்' படம் பெரிய வெற்றி பெற்றது. ஆனால் சச்சுவும், ஆனந்தனும் அந்த வெற்றயை தக்க வைத்துக் கொள்ளத் தவறி விட்டார்கள்.

சச்சு நல்ல ஆலோசர்கள் இல்லாமல் அடுத்தடுத்து வந்த நல்ல படங்களை தவிர்த்து 'காதலிக்க நேரமில்லை' படத்தில் காமெடி நடிகையாக நடித்தார். அதுவே அவரது அடையாளமாகி கடைசி வரை காமெடி நடிகையாகவே நடித்தார். ஆனந்தனும் அப்படித்தான். கொங்கு நாட்டு தங்கம், யானை வளர்த்த வானம்பாடி படங்கள் தோல்வி அடைய பின்னர் எம்ஜிஆரிடம் அடைக்கலமாகி அவர் நடித்த படங்களில் துணை வேடங்களில் நடித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !