'தி பாரடைஸ்' படத்திற்கு டிரைலர் வராது ?
தெலுங்குத் திரையுலகத்தில் அடுத்த பான் இந்தியா படமாக நானி நடித்துள்ள 'தி பாரடைஸ்' படம் செப்டம்பர் 24ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்திற்கான புரமோஷன் வேலைகளை படக்குழு ஏற்கெனவே ஆரம்பித்துவிட்டது.
இப்படத்தின் டீசர் ஒரு மாதத்திற்கு முன்பு தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி மொத்தமாக 30 மில்லியன் பார்வைகளை நெருங்கியுள்ளது.
பட வெளியீட்டிற்கு முன்பாக படத்தின் டிரைலர் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால், படத்தின் டிரைலர் வெளியாகாது என தெரிவித்துள்ளார்கள்.
டிரைலரை உருவாக்குவதற்கு நான்கைந்து நாட்கள் தேவைப்படும். ஆனால், படத்தின் சில முக்கிய வேலைகளை இருப்பதாலும், புரமோஷனுக்கு நேரம் தேவைப்படுவதாலும் டிரைலர் வெளியிடவில்லை என தெரிவித்துள்ளார்கள்.
ஸ்ரீகாந்த் ஒடெலா இயக்கத்தில், அனிருத் இசையில், நானி, மோகன் பாபு, கயாடு லோஹர், சோனாலி குல்கர்னி மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளார்கள்.