உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நரிக்குறவர் சமூதாயம் பற்றி 2 வருடம் ஆய்வு: 'சிங்காரம்' பட இயக்குநர்

நரிக்குறவர் சமூதாயம் பற்றி 2 வருடம் ஆய்வு: 'சிங்காரம்' பட இயக்குநர்


ராக் புரொடக்ஷன்ஸ் சார்பில் ரமண பாலாஜி, பத்மாவதி காந்தி தயாரித்துள்ள படம் 'சிங்காரம்'. யோகிபாபு கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தை கே.வி. கதிர்வேலு இயக்கியுள்ளார். சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். வரும் 30ம் தேதி வெளியாகவுள்ளது. யோகிபாபுவுடன், வேல ராமமூர்த்தி, எம்.எஸ்.பாஸ்கர், மரியா வின்சென்ட், சார்ம்ஸ், ஆர்த்தி கணேஷ், மனோபாலா, கல்கி, மாரிமுத்து, படவா கோபி, சென்ட்ராயன், டி.எஸ்.ஆர், தீபா சங்கர், சபிதா ராய், ஜாவா சுந்தரேசன், கே.எம். கணேஷ்கர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

படத்தின் அறிமுக நிகழ்வு நடந்தது. இதில் படம் குறித்து இயக்குநர் பேசும்போது, “நரிக்குறவர் சமூகத்தினரின் வரலாறு மற்றும் பின்னணியை அறிந்துகொள்வதற்காக 2 வருடங்களாக விரிவான ஆய்வுகளை மேற்கொண்டு இப்படத்தை உருவாக்கியுள்ளேன். சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகள், அதிகாரம் கொண்டவர்களுக்கு அளிக்கப்படும் மரியாதை, மற்றவர்கள் புறக்கணிக்கப்படுவது போன்ற பிரச்னைகளையும் இப்படம் பேசும்.

நரிக்குறவர் சமூகத்தின் வரலாற்றுடன் அரசியல் சார்ந்த அம்சங்களும் இதில் இடம்பெற்றுள்ளது. நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் அரசியலில் ஈடுபட்டு எம்எல்ஏ.,வாக உயர்வதை மையமாகக் கொண்டுள்ள இப்படம், சமூக விழிப்புணர்வுடன் நகைச்சுவை மற்றும் குடும்ப உணர்வுகளையும் இணைத்துப் பேசுகிறது. சமூகக் கருத்துகளுடன் குடும்பத்துடன் ரசிக்கக்கூடிய படமாக உருவாகி உள்ளது. என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !