உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பட்ஜெட் 3 கோடி... வசூல் 100 கோடி... சாதனை படைத்த கன்னட படம் 'பிரேமதா ஊரலி'

பட்ஜெட் 3 கோடி... வசூல் 100 கோடி... சாதனை படைத்த கன்னட படம் 'பிரேமதா ஊரலி'


மனோஜ்குமார் இயக்கத்தில், ஸ்ரீராம், தபஸ்வினி பூனச்சா, ராமிகா ஷிவு, ரங்கயான ரகு மற்றும் பலர் நடிப்பில் செப்டம்பர் 25ல் வெளியான கன்னடத் திரைப்படம் 'பிரேமதா ஊரலி'. காதல் ஊரில் அல்லது அன்பின் ஊரில் என்பது இதன் அர்த்தம்.

சுமார் 3 கோடிக்கும் குறைவான பட்ஜெட்டில் தயாரான இந்தப் படம் 100 கோடிக்கும் அதிகமான வசூலைக் குவித்து சாதனை புரிந்துள்ளது. குறைவான தியேட்டர்களில் குறைவான காட்சிகளில் வெளியான இப்படம் போகப் போக வாய் வழி பாராட்டில் ரசிகர்களை ஈர்த்து இந்த அளவிற்கு வசூலைக் குவித்துள்ளது.

உலக அளவில் 130 கோடி வசூலை இந்தப் படம் குவித்துள்ளதாகத் தெரிவிக்கிறார்கள். முதல் வார வசூலை விட, இரண்டாவது, மூன்றாவது வாரங்களிலும் வசூல் அதிகமாகி உள்ளது.

ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர் 2' படம் கர்நாடகாவில் வசூலைக் குவித்தாலும் இந்தப் படத்திற்கான வசூலும் குறிப்பிடும்படியாகவே தொடர்ந்துள்ளது.

கன்னட சினிமா வரலாற்றில் அதிக வசூலைக் குவித்த படங்களில் 6வது இடத்தையும், அதிக லாபத்தைக் கொடுத்த படமாகவும், இந்த 2026ம் ஆண்டில் அதிக வசூலைக் குவித்த படமாகவும் இருக்கிறது. யஷ் நடித்த 'டாக்சிக்' படத்தின் கன்னடப் பதிப்பின் கர்நாடக வசூலையும் இந்தப் படம் கடந்துள்ளது என்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !