உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 2021லாவது திருமணம் செய்வீங்களா

2021லாவது திருமணம் செய்வீங்களா

இயக்குனர் விக்னேஷ் சிவன், நயன்தாரா காதல் ஜோடி விசேஷமான நாட்களில் ஜோடி, ஜோடியான புகைப்படங்களைப் பதிவிட்டு ரசிகர்களின் வயிற்றெரிச்சலை லேசாகக் கொட்டிக் கொள்கிறார்கள்.

கொரானோ காலத்திலும் கடந்த சில மாதங்களாக அடிக்கடி நெருக்கமான புகைப்படங்களைப் பதிவிட்ட இந்த காதல் ஜோடி இன்றைய புத்தாண்டிலும் நெருக்கமான புகைப்படங்களைப் பதிவிட்டு பொறாமைப்பட வைத்துள்ளது.

புத்தாண்டு வாழ்த்துகளுடன் இரண்டு புகைப்படங்களைப் பதிவிட்டு “என்னிடமிருந்தும் என்னவளிடமிருந்தும், உங்களுக்கும், உங்கள் அனைவருக்காகவும்,” என வாழ்த்தியுள்ளார் விக்னேஷ் சிவன்.

கடந்த சில வருடங்களாகவே காதலில் மூழ்கியுள்ள இந்த காதல் ஜோடி இந்த வருடமாவது திருமணம் செய்து கொள்ளுமா அல்லது காதலைத் தொடருமா என்பது மிகப் பெரும் சஸ்பென்ஸ்தான்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !