தனுஷ் நடிப்பில் ஆயிரத்தில் ஒருவன்-2; செல்வராகவன் அறிவிப்பு
ADDED : 1741 days ago
'காத்திருந்த அன்பு உள்ளங்களுக்காக இதோ உங்கள் முன்னால்' என, ஆயிரத்தில் ஒருவன்-2 பட அறிவிப்பை வெளியிட்ட இயக்குனர் செல்வ ராகவன், படத்தின் போஸ்டரையும் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.
செல்வராகவன் இயக்கத்தில், கார்த்தி, பார்த்திபன், ஆண்ட்ரியா, ரீமாசென் நடிப்பில், ஜி.வி.பிரகாஷ் இசையில் கடந்த 2010ம் ஆண்டு வெளியான படம் ஆயிரத்தில் ஒருவன். சோழ மன்னர்கள் குறித்து வரலாற்று படமாக வெளியாகி, விமர்சகர்களால் இப்படம் கொண்டாடப்பட்டது. தற்போது பல படங்களுக்கும் இரண்டாம் பாகம் வெளியாகி வரும் நிலையில், ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம் எப்போது வரும் என செல்வராகவனிடம் பலரும் கேள்வி கேட்க துவங்கினர்.
இந்நிலையில், ஆயிரத்தில் ஒருவன்-2 அறிவிப்பை செல்வராகவன் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில், ''இது வரை கேட்டிருந்த, காத்திருந்த என் அன்பு உள்ளங்களுக்கு இதோ உங்கள் முன்னால்'' என தனுஷ் டுவிட்டர் கணக்கை இணைத்து படத்தின் போஸ்டரை பதிவிட்டுள்ளார்.
செல்வராகவனின் டுவிட்டை பகிர்ந்த தனுஷ், ''செல்வாவின் கனவுப்படம் இது. படத்தின் முன் தயாரிப்பு பணிக்கு மட்டும் ஒரு ஆண்டு தேவைப்படும். 2024ல் இளவரசன் திரும்புகிறான்'' என பதிவிட்டுள்ளார். இதனையடுத்து இப்படத்தில் தனுஷ் நடிப்பது உறுதியாகி உள்ளது.