உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / போஸ்டரைக் காப்பியடித்த செல்வராகவன்

போஸ்டரைக் காப்பியடித்த செல்வராகவன்

தமிழ் சினிமாவில் இந்த காப்பி கலாச்சாரம் எப்போது முடிவுக்கு வரும் என்றே தெரியவில்லை. படங்களைத்தான் காப்பியடித்தார்கள் என்று பார்த்தால் போஸ்டர் டிசைன்களைக் கூட காப்பியடித்து வெளியிடுகிறார்கள்.

தனது இயக்கத்தில் தனுஷ் 2024ம் ஆண்டில் நடிக்க உள்ள ஆயிரத்தில் ஒருவன் 2 படம் பற்றி நேற்று ஒரு போஸ்டருன் அறிவிப்பை வெளியிட்டார் இயக்குனர் செல்வராகவன்.

ஆனால், பிரபல பிரெஞ்சு ஓவியக் கலைஞரான மாத்தியூ லாப்ரே உருவாக்கி ஆர்ட் புத்தக ஓவியம் ஒன்றிலிருந்து காப்பியடித்து ஆயிரத்தில் ஒருவன் 2 போஸ்டரை உருவாக்கியிருக்கிறார் செல்வராகவன்.

அந்தக் காப்பியை உடனடியாக அவருடைய டுவிட்டர் கமெண்ட் பகுதியில் ரசிகர்கள் பகிர்ந்து வருடத்தின் முதல் நாளிலேயே இப்படியா காப்பி போஸ்டரை வெளியிடுவீர்கள் என கேட்டுள்ளார்கள்.

மாத்தியூ லாப்ரேயின் தனிப்பட்ட இணையதளத்தின் முகப்புப் பக்கத்திலேயே அந்த ஓவியம்தான் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. செல்வராகவன் அனுமதி வாங்கி அந்த ஒவியத்தைப் பயன்படுத்தினாரா அல்லது சுட்டு பயன்படுத்தினாரா என்பதை அவர்தான் சொல்ல வேண்டும்.

என்னப்பா இப்படி காப்பியடிக்கிறீங்களேப்பா....


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !