உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / புத்தாண்டை முன்னிட்டு 'மாஸ்டர்' எமோஜி வெளியீடு

புத்தாண்டை முன்னிட்டு 'மாஸ்டர்' எமோஜி வெளியீடு

விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் மற்றும் பலர் நடிக்க, லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள 'மாஸ்டர்' படம் வரும் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 13ம் தேதியன்று தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.

புத்தாண்டு பரிசாக விஜய் ரசிகர்களுக்காக டுவிட்டரில் இப்படத்திற்காக எமோஜிக்களை வெளியிட்டுள்ளனர். #MasterFilm, #MasterPongal, #மாஸ்டர், #మాస్టర్, #VijayTheMaster” ஆகிய 5 ஹேஷ்டேக்குகளை டுவிட்டரில் பதிவிடும் போது விஜய்யின் 'மாஸ்டர்' படத் தோற்ற முகம் கூடவே பதிவாகும்.

இதற்கு முன்பு 'மெர்சல், பிகில்' ஆகிய விஜய் நடித்த படங்களுக்கும் இது போன்று எமோஜிக்கள் வெளியிடப்பட்டது. இதற்கு முன்பெல்லாம் விஜய் படங்கள் ஹிந்தியில் வெளியானதில்லை. இப்போது முதல் முறையாக ஹிந்தியிலும் வெளியாவதால் 'மாஸ்டர்' பட வெளியீட்டை விஜய் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !