தயாரிப்பாளர் கே.பி.பிலிம்ஸ் பாலு மரணம்
பிரபு, குஷ்பு நடிப்பில் வெளிவந்து வெள்ளிவிழா கொண்டாடிய சின்னதம்பி. பாஞ்சாலங்குறிச்சி, ஜல்லிக்கட்டுகாளை, கல்யாண கலாட்டா, உத்தமராசா, பாண்டிதுரை, பிக்பாக்கெட், மதுரைவீரன் எங்க சாமி, உள்பட 15க்கும் மேற்பட்ட திரைப்படங்களை தயாரித்தவர் கே.பி.பிலிம்ஸ் பாலு. இவர் கடந்த மாதம் உடல்நலக்குறைவால் சென்னை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சில நாள் சிகிச்சைக்கு பிறகு அதிலிருந்து மீண்டு வீடு திரும்பினார்.
இந்த நிலையில் நேற்று அவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பாலு மறைவுக்கு திரையுலகை சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.