தெலுங்கு நடிகர் நர்சிங் யாதவ் காலமானார்
ADDED : 1740 days ago
பிரபல தெலுங்கு வில்லன் நடிகர் நர்சிங் யாதவ். 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழில் பாட்ஷா, குருவி, லாடம், ஆட்ட நாயகன், ராஜபாட்டை, பூஜை உள்பட பல படங்களில் நடித்துள்ளர். இந்தி படங்களிலும் நடித்துள்ளார். ராம்கோபால் வர்மாவின் ஆஸ்தான நடிகராக இருந்தார். அவர் இயக்கும் படங்களில் நர்சிங் யாதவ் கட்டாயம் நடித்திருப்பார்.
57 வயதான நர்சிங் யாதவ் குடும்பத்தினருடன் ஐதராபாத்தில் வசித்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவருக்கு சிறுநீரக பிரச்சினை ஏற்பட்டது. டயாலிசிஸ் செய்து வந்தார். இந்த நிலையில் அவரது உடல்நிலை மோசமானது. செயற்கை உயிர்காக்கும் கருவிகளுடன் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலன் இன்றி மரணம் அடைந்தார். அவருக்கு மைலா சித்ரா என்ற மனைவியும், மைலா ரித்விக் யாதவ் என்ற மகனும் உள்ளனர்.