உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இயற்கையுடன் புத்தாண்டைக் கொண்டாடிய கீர்த்தி சுரேஷ்

இயற்கையுடன் புத்தாண்டைக் கொண்டாடிய கீர்த்தி சுரேஷ்

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். அவர் நடித்து கடந்த வருடத்தில் தமிழில் 'பெண்குயின்' படமும், தெலுங்கில் 'மிஸ் இந்தியா' படமும் ஓடிடி தளங்களில் வெளியானது.

தற்போது தமிழில் 'அண்ணாத்த, சாணிக்காயிதம்' ஆகிய படங்களிலும், தெலுங்கில் 'குட்லக் சகி, ரங்தே, ஐனா இஷ்டம் நுவ்வு, சரக்குவாரி பாட்டா' ஆகிய படங்களிலும், மலையாளத்தில் 'மரக்காயர்' படத்திலும் நடித்து வருகிறார்.

புத்தாண்டை வரவேற்கும் விதத்தில் ஒரு மலைப்பிரதேசத்தில் இயற்கை அழகை ரசித்துக் கொண்டிருக்கும் விதவிதமான புகைப்படங்களைப் பகிர்ந்து “வருக 2021, வளமும், நலமும், செழிப்பும் உங்கள் ஒவ்வொருவருக்கும் கிடைக்கட்டும்,” என வாழ்த்தியுள்ளார்.

கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள தெலுங்குப் படமான 'குட்லக் சகி' ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று பேசப்பட்டது. கடந்த வருடம் அவர் நடித்து வெளியான இரண்டு படங்களுமே ஓடிடி ரிலீஸ்தான், இந்த ஆண்டாவது தியேட்டர் வெளியீட்டில் ஆரம்பிப்பாரா அல்லது ஓடிடியில் ஆரம்பிப்பாரா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !