டாக்டர் படப்பிடிப்பு நிறைவு
ADDED : 1739 days ago
ஹீரோ படத்திற்கு பின் தனது நண்பர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் 'டாக்டர்' படத்தில் நடித்து வந்தார் சிவகார்த்திகேயன். நாயகியாக பிரியா மோகன் நடிக்கிறார். இவர்களுடன் விஜே அர்ச்சனா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். உடல் உறுப்புகள் திருட்டு தொடர்பாக இந்த கதை இருக்கும் என தெரிகிறது. கொரோனாவால் நிறுத்தப்பட்ட படப்பிடிப்பு மீண்டும் சமீபத்தில் துவங்கி விறுவிறுப்பாக நடந்து வந்தது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு இதை படக்குழுவினர் அனைவரும் கேக் வெட்டி கொண்டாடினர். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் ராஜேஷ் தயாரிக்கிறார். ஏற்கனவே இப்படத்தில் இருந்து செல்லமா செல்லமா, நெஞ்சமே நெஞ்சமே பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.