பாடலாசிரியர் விவேக்கின் புது அவதாரம்
ADDED : 1784 days ago
சமீபகாலமாக ரசிகர்களை கவர்ந்து வரும் பாடலாசிரியர் விவேக். பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு பாடல் எழுதி வருகிறார். கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் 43வது படத்திற்கு, இவர் பாடல் எழுதுகிறார். கூடுதலாக படத்திற்கு வசனம், திரைக்கதை அமைக்கும் பொறுப்பையும் ஏற்றுள்ளார்.
இதுகுறித்து, ''முதன்முறையாக திரைக்கதை, வசனம் எழுத உள்ளேன். இந்த வாய்ப்பை தந்த தனுஷ், கார்த்திக் நரேனுக்கு நன்றி'' என தெரிவித்துள்ளார் விவேக்.