கடவுளும் நானும்: ராஜீவ் மேனன், மதன் கார்க்கி இணைந்து உருவாக்கும் தமிழிசை பாடல்கள்
ADDED : 1732 days ago
மார்கழி மாத இசை விழாக்களில் பெரும்பாலும் பழந்தமிழ்ப் பாடல்களே பாடப்படுகின்றன. இந்த ஆண்டு இயக்குநர் ராஜீவ் மேனனும் பாடலாசிரியர் மதன் கார்க்கியும் இணைந்து புதிய தமிழிசைப் பாடல் ஒன்றை உருவாக்கியுள்ளனர்
இயக்குநர் ராஜீவ் மேனன் இசைக் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவருடைய இசையமைப்பில் சர்வம் தாளமயம் படத்தில் 'வரலாமா உன்னருகில்' எனும் பாடல் வெளியாகி இசை இரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது. அந்தப் பாடலை எழுதியவர் பாடலாசிரியர் மதன் கார்க்கி.
இவர்கள் கூட்டணியில் உருவாகி வெளியாகும் 'கடவுளும் நானும்' எனும் பாடல் கடவுளுக்கும் மனிதனுக்குமான நெருக்கத்தைப் பற்றி பாடுகிறது. இந்தப் பாடலுக்கு ராஜீவ் மேனன் காம்போஜி ராகத்தில் மெட்டமைத்துள்ளார். இந்தப் பாடல் மைலாப்பூரில் நடந்த ஒரு இசை விழாவில் முதன்முதலாக அரங்கேற்றப்பட்டது. இப்போது இந்த ஆண்டின் இறுதியில் ஆல்பமாக வெளியாகிறது. இதே போல் இன்னும் பல தமிழிசைப் பாடல்களை ராஜீவ் மேனனும் மதன் கார்க்கியும் உருவாக்கி வருகிறார்கள்.