மீண்டும் கைதான சித்ராவின் கணவர்
ADDED : 1780 days ago
கடந்த மாதம் சின்னத்திரை நடிகை விஜே சித்ரா திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அவரது கணவர் ஹேமந்த் கைது செய்யப்பட்டுள்ளார். சித்ரா மரணம் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் நீடித்து வரும் நிலையில், தொடர்ந்து ஹேமந்திடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஹேமந்த் தற்போது மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2015ம் ஆண்டு மருத்துவ இடம் வாங்கி தருவதாக கூறி ஒன்றரை கோடி ரூபாய் மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஹேமந்த்தை கைது செய்துள்ளனர்.