மேலும் செய்திகள்
மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா
1729 days ago
மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ?
1729 days ago
போலீஸ் அதிகாரியாக அஞ்சு குரியன்
1729 days ago
இணையதள தேடல் : தீபிகா படுகோன்
1729 days ago
படம் : 12பி
வெளியான ஆண்டு : 2001
நடிகர்கள் : ஷாம், சிம்ரன், ஜோதிகா, விவேக்
இயக்கம் : ஜீவா
தயாரிப்பு : விக்ரம் சிங்
'அந்த ஒரு நிமிஷம் நான் எடுத்த முடிவு, என் வாழ்க்கையை தலைகீழாக மாற்றிவிட்டது...' என பெருமையாக அல்லது புலம்பலாக கூறாதோர் யாரும் இருக்க முடியாது. போலந்து இயக்குனர் கிறிஸ்டோப் கீஸ்லோவ்ஸ்கி இயக்கத்தில், 1987-ல் வெளியான, பிளைண்ட் சான்ஸ், உலக சினிமாவில் தவிர்க்க முடியாத படம். படத்தில், கதாநாயகனின் வாழ்க்கை, 'இப்படி அமைந்திருந்தால் எப்படி இருந்திருக்கும்' என, ஒரே சம்பவத்தில் இருந்து நிகழும் மூன்று சாத்தியங்களை திரைக்கதையாக்கி, ரசிகர்களை ஆச்சரியத்தில் மெய்சிலிர்க்க செய்தார்.
இப்படத்தின் பாதிப்பில், ஏராளமான படங்கள் வெளிவந்துள்ளன; வருகின்றன. இரு சாத்தியங்களை மையப்படுத்தி, தமிழில் வெளியான படம், 12 பி. ஒளிப்பதிவாளர் ஜீவா, இப்படத்தின் மூலம் இயக்குனரானார். வேலையில்லா பட்டதாரி இளைஞனான ஷாம், 12பி பேருந்தில் ஏறி, இண்டர்வியூ செல்ல வேண்டும். அந்த பேருந்தில் ஏறிச் செல்லும் ஷாமிற்கு வேலையும், சிம்ரனின் காதலும் கிடைக்கும். அந்த பேருந்தை தவறவிடும் ஷாமிற்கு, மெக்கானிக்காக மாறி, ஜோதிகாவை காதலிப்பார். இது தான், படத்தில் கதைக் கரு. 'அப்படி நடந்திருந்தால்...' என்ற ஜானரில், தமிழின் முதல் முயற்சி இது.
மாதவன், அஜித், விக்ரம் என, பல ஹீரோக்கள் பரிசீலிக்கப்பட்டு இறுதியில், துணை நடிகராக ஓரிரு படங்களில் தலைகாட்டிய ஷாம், இப்படத்தின் ஹீரோ ஆனார். கதாநாயகனாக முதல் படத்திலேயே, அன்றைய முன்னணி நடிகையரான சிம்ரன், ஜோதிகா ஆகியோருக்கு ஜோடியாக நடித்தார்.
இயக்குனர் ஜீவா, தன் கல்லுாரி நாட்களில், 12பி பஸ்சில் சென்றாராம். அதனால், 12பி படத்தின் தலைப்பு ஆனது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையில், 'எங்கேயோ போகின்ற, ஜோதி நிறைஞ்சவ, முத்தம் முத்தம், சரியா தவறா, பூவே வாய் பேசும்...' பாடல்கள் ரசிக்க செய்தன.
12பி பஸ், எல்லார் வாழ்விலும் வரும்.
1729 days ago
1729 days ago
1729 days ago
1729 days ago