உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / புதுமுகங்களின் பரோல்

புதுமுகங்களின் பரோல்

புதுமுகங்கள் இணைந்து உருவாக்கி வரும் படம் பரோல். இதில் பீச்சாங்கை படத்தில் ஹீரோவாக நடித்த ஆர்.எஸ்.கார்த்திக் நடிக்கிறார். அவருடன் மோனிஷா, லிங்கா, கல்பிக்கா என்ற புதுமுகங்கள் நடிக்கிறார்கள். ட்ரிப்பர் என்டர்டைன்மெண்ட் சார்பில் மதுசூதனன் தயாரிக்கிறார், மகேஷ் திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்கிறார். ராஜ்குமார் அமல் ஒளிப்பதிவு செய்கிறார்.

ஒரு கொலை வழக்கில் சிறையில் தண்டனையை அனுபவவித்து வரும் அண்ணனை தம்பி பரோலில் எடுத்து வருகிறார். அது தம்பிக்கே பிரச்சினையாக முடிகிறது. அது என்ன என்பதுதான் கதை. அண்ணன், தம்பி பாசத்தை வித்தியாசமான களத்தில் சொல்ல முயற்சித்திருக்கிறோம். கதை திருச்சியில் ஆரம்பித்து சென்னை, கோவை, சேலம் என பயணிக்கிறது. செண்டிமெண்ட் கலந்து ஆக்ஷன் படமாக உருவாகி வருகிறது என்கிறார் இயக்குனர் துவாரக் ராஜா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !