உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இன்ஸ்டாகிராம் - 10 மில்லியன் பாலோயர்களைப் பெற்ற அல்லு அர்ஜுன்

இன்ஸ்டாகிராம் - 10 மில்லியன் பாலோயர்களைப் பெற்ற அல்லு அர்ஜுன்

தென்னிந்தியத் திரையுலகத்தில் மற்ற மொழி நடிகர்களைவிட தெலுங்கு நடிகர்கள் தான் அதிகம் பேர் சுறுசுறுப்பாக செயலாற்றிக் கொண்டிருக்கிறார்கள். சிரஞ்சீவி, வெங்கடேஷ், நாகார்ஜுனா, பவன் கல்யாண், மகேஷ் பாபு, பிரபாஸ், அல்லு அர்ஜுன், ராம் சரண், நானி, விஜய் தேவரகொண்டா என அந்தப் பட்டியல் நீளமாகவே உள்ளது.

இளம் நடிகர்களில் ஒருவரான அல்லு அர்ஜுன் தற்போது இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளத்தில் 10 மில்லியன் பாலோயர்களைப் பெற்றுள்ளார். அதற்காக தன்னுடைய ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக வீடியோ ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.

அல்லு அர்ஜுனுக்கு முன்பாகவே இன்ஸ்டாகிராம் தளத்தில் விஜய் தேவரகொண்டா, 10 மில்லியன் பாலோயர்களைக் கடந்துவிட்டார். அவருக்கு தற்போது 10.2 மில்லியன் பாலோயர்கள் இருக்கிறார்கள்.

இருப்பினும் பேஸ்புக்கில் 20 மில்லியன் பாலோயர்கள், டுவிட்டரில் 5.5 மில்லியன் பாலோயர்கள், இன்ஸ்டாகிராமில் 10 மில்லியன் பாலோயர்கள் என தெலுங்கு நடிகர்களில் சமூக வலைத்தளங்களில் அதிக பாலோயர்களைப் பெற்று முதலிடத்தில் உள்ளார் அல்லு அர்ஜுன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !