விஜய்சேதுபதியின் அம்மா விஜய்யிடம் கேட்ட கேள்வி
பேட்ட படத்தில் வில்லனின் மகனாக விஜய்சேதுபதி நடித்திருந்தாலும் கூட, மாஸ்டர் படத்தில் தான் விஜய்சேதுபதியின் ஒரிஜினல் வில்லத்தனம் வெளிப்பட இருக்கிறது என்கிறார்கள் மாஸ்டர் படக்குழுவினர். அந்தவகையில் விஜய்யுடன் தனது மகன் நடிப்பதால், மாஸ்டர் படப்பிடிப்பு தளத்திற்கு சென்று விஜய்யை சந்திக்க ஆசைப்பட்டிருக்கிறார் விஜய்சேதுபதியின் அம்மா. அவரது ஆசையையும் நிறைவேற்றி வைத்துள்ளார் விஜய்சேதுபதி.
படப்பிடிப்பு தளத்தில் விஜய்யுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட விஜய்சேதுபதியின் அம்மா, தனது மகன் படப்பிடிப்பில் நன்றாக ஒத்துழைப்பு கொடுத்து நடிக்கிறாரா என விஜய்யிடம் கேட்டுள்ளார். அதற்கு விஜய், அவரது மனம் குளிரும் விதமாக, விஜய்சேதுபதியின் குண நலன்கள் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவை குறித்து பாராட்டி பேசவே, ரொம்பவே மகிழ்ச்சி அடைந்தாராம் விஜய்சேதுபதியின் அம்மா. இந்த விஷயத்தை சமீபத்தில் பகிர்ந்து கொண்ட விஜய்சேதுபதி, விஜய்க்கு தனது நன்றியையும் தெரிவித்துள்ளார்.