ராம்சரண் படத்தை இயக்கும் லோகேஷ் கனகராஜ்?
மாநகரம் படத்தின் வெற்றி, கைதியின் பிளாக்பஸ்டர் வெற்றி ஆகியவற்றை தொடர்ந்து, விஜய் நடித்த மாஸ்டர் படத்தை இயக்கியுள்ள லோகேஷ் கனகராஜ், அடுத்ததாக கமல் நடிக்கும் விக்ரம் படத்தை இயக்கி வருகிறார். ஏற்கனவே ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை இயக்குவார் என சொல்லப்பட்ட நிலையில் அந்த திட்டம் கைவிடப்பட்டு, அதன்பிறகுதான் தற்போது கமல் படத்தை இயக்கி வருகிறார்.
இந்தநிலையில் தெலுங்கில் லோகேஷ் கனகராஜ் டைரக்சனில் நடிக்க விரும்பியுள்ளார் இளம் முன்னணி நடிகர் ராம்சரண். இதனை தொடர்ந்து ஆந்திரா சென்று ராம்சரணிடம் கதை சொல்லிவிட்டு வந்துள்ளாராம் லோகேஷ் கனகராஜ். அவர் சொன்ன ஒன்லைன் ராம்சரணுக்கு பிடித்துப்போனதாகவும் தகவல்.. இன்னும் ஒப்பந்தம் உறுதியாகவில்லை என்றாலும், ராஜமவுலி டைரக்சனில் ராம்சரண் நடித்து வரும் 'ஆர்ஆர்ஆர்' படம் முடிந்ததுமே லோகேஷ் கனகராஜ் படத்தில் தான், ராம்சரண் நடிக்க இருக்கிறாராம்.