மகிழ்ச்சியில் சம்யுக்தா
ADDED : 1733 days ago
மாடலிங்கான சம்யுக்தா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று சில வாரங்களில் வெளியேறினார். இதன் பின் படங்களில் நடிப்பேன் என கூறி வந்தார். அதற்கு கை மேல் பலனாக விஜய் சேதுபதியின் துக்ளக் தர்பார் படத்தில் இவர் நடிக்கிறார். இப்போது அடுத்த வாய்ப்பாக பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் கவுதம் கார்த்திக், ஸ்ரீதிவ்யா நடிப்பில் உருவாகும் படத்தில் பிஸியோதெரபிஸ்ட் வேடத்தில் நடிக்கிறார். அடுத்தடுத்த பட வாய்ப்புகளால் மகழ்ச்சியில் உள்ளார் சம்யுக்தா.