காதலர் தினத்தில் வருகிறார் தனுஷ்
ADDED : 1730 days ago
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் ஜகமே தந்திரம். கேங்ஸ்டர் கதையில் உருவாகியுள்ள இந்த படத்தில் தனுசுடன் ஐஸ்வர்யா லட்சுமி, கலையரசன், தேவன் உள்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை கடந்த மே மாதம் 1-ந்தேதி அன்றே வெளியிட திட்டமிட்டிருந்தனர். ஆனால் கொரோனா வைரஸ் தொற்றினால் திரையரங்குகள் மூடப்பட்டதால் ஜகமே தந்திரம் படத்தை வெளியிட முடியாத நிலை ஏற்பட்டதோடு, ஓடிடி தளங்களிலும் படத்தை வெளியிடவில்லை.
விஜய்யின் மாஸ்டர் படத்தைப் போலவே ஜகமே தந்திரம் படத்தையும் தியேட்டரில் தான் வெளியிடுவோம் என்று ரிலீசை தள்ளி வைத்திருந்தனர். இந்தநிலையில் தற்போது ஜகமே தந்திரம் படத்தை காதல் தினத்தை முன்னிட்டு இருதினங்களுக்கு முன்பாக பிப்., 12 அன்று வெளியிட திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.