உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'ஈஸ்வரன்' வெளிநாடு ஓடிடி வெளியீடு நிறுத்தம்

'ஈஸ்வரன்' வெளிநாடு ஓடிடி வெளியீடு நிறுத்தம்

சுசீந்திரன் இயக்கத்தில், சிலம்பரசன், நிதி அகர்வால், நந்திதா ஸ்வேதா மற்றும் பலர் நடித்த 'ஈஸ்வரன்' படத்தை தமிழ்நாட்டில் தியேட்டர்களில் வெளியாகும் ஜனவரி 14ம் தேதியன்றே, வெளிநாடுகளில் ஓடிடியில் வெளியிடப் போவதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது.

அதையடுத்து படத்தை தமிழ்நாட்டில் வெளியிடப் போவதில்லை என திரையரங்கு உரிமையாளர்கள் சங்கச் செயலாளர் ரோகிணி பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

அதன் காரணமாக தற்போது 'ஈஸ்வரன்' படத் தயாரிப்பு நிறுவனமான மாதவ் மீடியா வெளிநாடு ஓடிடி வெளியீட்டை நிறுத்துவதாக அறிவித்துவிட்டது.

“தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க வேண்டுகோளின்படி தியேட்டர் அனுபவத்தை ஒதுக்கித் தள்ளவில்லை. ஈஸ்வரன் படத்தை வெளிநாடுகளில் ஓடிடி மூலம் வெளியிடுவதாக நாங்கள் எடுத்த முடிவு துரதிர்ஷ்டவசமானது. ஓடிடியில் வெளியிடுவதை நிறுத்தி வைக்கிறோம். திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தினர் எங்களுக்கு மேலும் தியேட்டர்களைக் கொடுத்து ஆதரிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்,” எனத் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !