மேலும் செய்திகள்
காந்தார சாப்டர் 1ல் நடித்தது பெருமை : சம்பத் ராம்
1723 days ago
திருமண நிச்சயதார்த்த தேதியை அறிவித்த அல்லு சிரிஷ்
1723 days ago
தமிழக திரையரங்குகளில் நூறு சதவீத இருக்கைகளில் பார்வையாளர்களை அனுமதிக்கலாம் என முதலில் தமிழக அரசு தளர்வுகளை அளித்தது. ஆனால் மத்திய அரசு மற்றும் நீதிமன்றம் ஆகியவற்றின் எச்சரிக்கை காரணமாக மீண்டும் 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என தமிழக அரசு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. திரையரங்கு உரிமையாளர்கள் இதனால் ஏற்படும் இழப்பை சரிகட்ட, ரசிகர் காட்சிகள் என்கிற பெயரில் ஒருநாளைக்கு ஆறு காட்சிகள் வரை நடத்தலாம் என திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
தமிழகத்தில் நிலைமை இப்படி இருக்க, இன்று(ஜன., 13) முதல் திரையரங்குகள் திறக்கப்படவுள்ள கேரளாவிலோ நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. அங்கே 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி என்பதுடன், தியேட்டர்களில் இரவுக்காட்சி (9.30மணி காட்சி) திரையிடக்கூடாது என புது உத்தரவையும் பிறப்பித்துள்ளனர். விஜய்யின் மாஸ்டர் படம் மூலம் திரையரங்குகளை திறக்க நினைத்த உரிமையாளர்களுக்கு இது அதிர்ச்சி அளித்தாலும், அதற்கு பதிலாக முன்கூட்டியே காலை காட்சி ஒன்றை திரையிட்டு சமாளிக்க முடிவெடுத்து உள்ளார்களாம்..
1723 days ago
1723 days ago