கொரோனாவிலிருந்து மீண்ட ராய் லட்சுமி
ADDED : 1727 days ago
கொரோனா ஊரடங்கு தளர்வுகளால் மீண்டும் படப்பிடிப்புகள் நடக்கத் தொடங்கியுள்ளன. தொழில்நுட்ப கலைஞர்கள், நடிகர், நடிகைகள் என படப்பிடிப்புகளில் கூட்டம் கூடுவது தவிர்க்க இயலாதது. இதனால் பல முன்னணி நடிகர், நடிகைகள் கொரோனா பாதிப்பிற்கு ஆளாகி வருகின்றனர்.
அந்த வரிசையில் தற்போது நடிகை ராய் லட்சுமியும் சேர்ந்துள்ளார். அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. துபாயில் இருந்த சமயத்தில் அவருக்கு இந்த நோய் தொற்று ஏற்பட்டது. அதனால் அவர் கடந்த வாரம் முதல் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சைப் பெற்று வந்துள்ளார். தற்போது மீண்டும் பரிசோதனை செய்து பார்த்ததில் நெகட்டிவ் என ரிசல்ட் வந்துள்ளது.