உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நானே வருவேன் - பழைய படப் பெயரை வைத்த செல்வராகவன்

நானே வருவேன் - பழைய படப் பெயரை வைத்த செல்வராகவன்

செல்வராகவன், தனுஷ் கூட்டணியில் நான்காவது படமாகவும், செல்வராகவன் யுவன் கூட்டணியில் ஐந்தாவது படமாகவும் உருவாகும் புதிய படத்தின் பெயர் 'நானே வருவேன்' என இரு தினங்களுக்கு முன்பு அறிவித்தார்கள்.



இது ஒன்றும் புதிய பெயர் அல்ல, ஒரு பழைய படத்தின் பெயர்தான். ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டவர்களுடன் நடித்து 80களில் முன்னணி கதாநாயகியாக விளங்கிய நடிகை ஸ்ரீப்ரியா இயக்கி 1992ல் வெளிவந்த படம் 'நானே வருவேன்'. இப்படத்தில் ரகுமான், ஸ்ரீப்ரியா, ராதிகா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.


அந்தப் படத்தின் பெயரைத்தான் தற்போது செல்வராகவன் தனது இயக்கத்தில் வெளிவரும் 12வது படத்தின் பெயராக அறிவித்துள்ளார்.


கடந்த 19 வருடங்களில் 12 படங்களை மட்டுமே இயக்கியிருந்தாலும் சினிமா ரசிகர்களின் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைத் தக்க வைத்துள்ளார். அவர் இப்படி ஒரு பழைய படத்தின் பெயரை தன் படத்திற்காக மீண்டும் வைத்திருப்பது ஆச்சரியப்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !