விஜய்யின் 66ஆவது படம்- புதிய தகவல் வெளியானது!
ADDED : 1726 days ago
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள அவரது 64ஆவது படமான மாஸ்டர் கடந்த 13-ந்தேதி திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதையடுத்து கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் இயக்கும் படத்தில் நடிக்கிறார் விஜய். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்குகிறது.
இந்த நிலையில், விஜய்யின் 66ஆவது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க, மாஸ்டர் படத்தை தயாரித்த லலித்குமாரே அப்படத்தை தயாரிப்பதோடு, அனிருத் மீண்டும் இசைய மைப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.