வனிதா விஜயகுமார் வெளியிட்ட குட்நியூஸ்!
ADDED : 1726 days ago
1995ல் விஜய் நடித்த சந்திரலேகா படத்தில் நாயகியாக அறிமுகமானவர் வனிதா விஜயகுமார். அதையடுத்து ராஜ்கிரணுடன் மாணிக்கம் உள்பட பல படங்களில் நடித்தவர், எம்ஜிஆர் சிவாஜி ரஜினி கமல் என்ற பெயரில் ஒரு படத்தையும் தயாரித்தார். சமீபகாலமாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சில நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.
மேலும், கடந்த ஆண்டில் பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்ட வனிதா விஜயகுமார் அடுத்த சில மாதங்களிலேயே அவரை விட்டும் பிரிந்தவர், தற்போது தனது மகள்களுடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று வனிதா விஜயகுமாரின் இளைய மகள் ஜெனிதா பூப்படைந்துள்ளார். இந்த செய்தியை இன்ஸ்டா கிராமில் புகைப்படத்துடன் பகிர்ந்துள்ள வனிதா, எனது மகள் பெரிய பெண்ணாகி விட்டாள். எனது மகள்கள் இந்த பிரபஞ்சத்தில் விலைமதிப்பற்றவர்கள் என்றும் தெரிவித் துள்ளார். இதையடுத்து அவரது தொடர்பில் இருக்கும் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.