உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சிம்புவின் மாநாடு- மிரட்டலான மோஷன் போஸ்டர் வெளியானது!

சிம்புவின் மாநாடு- மிரட்டலான மோஷன் போஸ்டர் வெளியானது!

சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள ஈஸ்வரன் பொங்கலுக்கு திரைக்கு வந்துள்ள நிலையில், அடுத்தபடியாக மாநாடு, பத்து தல போன்ற படங்களில் நடிக்கிறார். இதில், வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் மாநாடு படத்தில் அவருடன் கல்யாணி பிரியதர்ஷன், இயக்குனர்கள் பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகரன், எஸ்.ஜே.சூர்யா மற்றும் ஒய்.ஜி.மகேந்திரன், பிரேம்ஜி உள்பட பலர் நடிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு லாக்டவுனுக்கு முன்பே சென்னை, பாண்டிச்சேரி உள்பட பல பகுதிகளில் நடைபெற்றது.



அப்துல்காலிக் என்ற முஸ்லீம் இளைஞராக சிம்பு நடிக்கும் இப்படத்தின் பர்ஸ்ட்லுக், செகண்ட் லுக் ஏற்கனவே வெளியாகி விட்ட நிலையில், பொங்கலை முன்னிட்டு நேற்று மோஷன் போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. அந்த போஸ்டரில் அரசியல் மாநாட்டிற்குள் கையில் துப்பாக்கி யுடன் யாரையோ குறி பார்க்கிறார் சிம்பு. அதையடுத்து அந்த மாநாட்டிற்குள் வெடிகுண்டு வெடிக்கிறது. இந்த மோஷன் போஸ்டர் யுவன் சங்கர் ராஜாவின் இசையுடன் வெளியிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !