கமல் துவக்கி வைத்த 'கேங்ஸ்டர் 21'
ADDED : 1834 days ago
எம்ஜிஆரின் 104வது பிறந்த நாளை முன்னிட்டு, ஜூனியர் எம்.ஜி.ஆர் வி.ராமச்சந்திரன் நடிக்கும் கேங்ஸ்டர் 21 படப்பிடிப்பை கமல்ஹாசன் தொடங்கி வைத்தார். இந்தப் படத்தை அட்டு படத்தை இயக்கிய ரத்தன்லிங்கா இயக்குகிறார். ஏ.டி.ஆர் புரொடக்சன்ஸ் சார்பில் எம்.என். வீரப்பன் தயாரிக்கிறார். பாலாஜி ஒளிப்பதிவு செய்கிறார், விக்ரம் இசை அமைக்கிறார்.
படத்துவக்க விழாவுக்கு எம்.ஜி.ஆரின் ராமாவரம் தோட்டத்திற்கு வந்த கமல்ஹாசன் அங்குள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின் படப்பிடிப்பைத் தொடங்கி வைத்தார் . இப்படம் சென்னையில் நிழல் உலக தாதாவாக இருந்த ஒருவரின் கதையை அடிப்படையாக வைத்து உருவாக்கப்படுகிறது.