விருமாண்டி உடன் இணைந்த சசிகுமார்
ADDED : 1781 days ago
உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட க.பெ.ரணசிங்கம் படத்தை இயக்கிய விருமாண்டி, அடுத்ததாக மீண்டும் ஒரு உண்மை சம்பவத்தை படமாக்குகிறார். இதில் நாயகனாக சசிகுமார் நடிக்கிறார். படம் குறித்து படக்குழுவினர் கூறியதாவது: தமிழ் திரையுலகில் முன்னனி நடிகர்களின் படங்கள் வசூலில் சக்கை போடு போடும். இதற்கு என்ன காரணம் என்பதை, 1975ம் ஆண்டுகளில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இப்படத்தை உருவாக்கியுள்ளோம்.ஏப்ரலில் படப்பிடிப்பு துவங்குகிறது. பரதன் பிலிம்ஸ் சார்பில் ஆர்.விஸ்வநாதன் தயாரிக்கிறார். படத்தின் பூஜை எளிமையாக நடந்தது. படத்தை ஆண்டு இறுதியில் வெளியிட திட்டமிட்டுள்ளோம் என்றனர்.