ஆரியின் வெற்றி பொறுப்புள்ள குடும்பப் பிள்ளைகளின் வெற்றி: சேரன்
ADDED : 1733 days ago
பிக்பாஸ் தமிழ் சீசன் 4ன் வெற்றியாளராக நடிகர் ஆரி நேற்று அறிவிக்கப்பட்டார். திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் தமிழ் சினிமாவின் மூத்த இயக்குனரான சேரன் ஆரியை வாழ்த்தி தனது சமூகவலைதளப்பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளார். அதில், ஆரியின் வெற்றி ஒவ்வொரு பொறுப்புள்ள குடும்பப்பிள்ளைகளின் வெற்றி. ஆரியின் வெற்றி ஒவ்வொரு சமூகப்பொறுப்பாளனின், நேர்மையான மனிதர்களின் வெற்றி. ஒவ்வொரு கடின உழைப்பாளியும் பெருமை கொள்கிறான் உங்களின் வெற்றியில்... வாழ்த்துக்கள், என அவர் தெரிவித்துள்ளார்.