பிரபுதேவாவுடன் ஜோடி சேரும் காஜல் அகர்வால்?
ADDED : 1718 days ago
இந்தியில் பிஸியான இருக்குனராக வலம் வரும் நடிகர் பிரபுதேவா, தமிழில் தொடர்ந்து ஹீரோவாக நடித்து வருகிறார். அவரது 50வது படமான பொன்மாணிக்கவேல் விரைவில் வெளியாக உள்ளது.
இந்நிலையில் பிரபு தேவா அடுத்ததாக குலேபகாவலி பட இயக்குனர் கல்யாண் இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார். இதில் அவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது. கௌதம் கிச்சிலுவை திருமணம் செய்து கொண்ட பிறகும் கூட காஜல் அகர்வால் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.