சோனு சூட்டின் மனு தள்ளுபடி
ADDED : 1719 days ago
கொரோனா காலகட்டத்தில் ஏழை மக்களுக்கு ஏராளமான உதவிகளை செய்தவரான பாலிவுட் நடிகர் சோனு சூட், மும்பையில் குடியிருப்பு பகுதியில் உள்ள தனது கட்டடத்தை உரிய அனுமதி பெறாமல் ஹோட்டலாக மாற்றியது சம்பந்தமாக அவருக்கு மும்பை மாநகராட்சி கடந்த அக்டோபர் மாதம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
அதை எதிர்த்து மும்பை சிவில் நீதிமன்றத்தில் நடிகர் சோனு சூட் வழக்கு தொடர்ந்தார். அதையடுத்து அந்த கட்டடத்தை ஆய்வு செய்த அதிகாரிகள் அவர் உரிய அனுமதி பெறாமலேயே குடியிருப்பு கட்டிடத்தை ஓட்டலாக மாற்றியதை மீண்டும் உறுதிப்படுத்தினர்.
அதையடுத்து மாநகராட்சி தனக்கு எதிரான நடவடிக்கை எடுக்காமல் இருக்க, மும்பை உயர்நீதி மன்றத்தில் இடைக்கால தடை விதிக்க மனு ஒன்றினை தாக்கல் செய்தார் சோனுசூட். இந்நிலையில், இன்று அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்துள்ளனர்.