உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சூர்யாவுக்கு ஜோடியாகிறார் 'டாக்டர்' பிரியங்கா மோகன்

சூர்யாவுக்கு ஜோடியாகிறார் 'டாக்டர்' பிரியங்கா மோகன்

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்க இருக்கும் படம் குறித்து ஏற்கனவே அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி விட்டது. இந்தநிலையில் இந்தப்படத்தில் கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடிக்க இருக்கிறார் என்கிற தகவல் கசிந்துள்ளது. இவர் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

மாடலிங் துறையில் இருந்து சினிமாவில் கால் பதித்த பிரியங்கா மோகன், ஏற்கனவே கன்னடம், தெலுங்கில் நடித்துள்ளார். தமிழில் மாயன் என்கிற படத்தில் நடித்து வந்த பிரியங்கா மோகனுக்கு அந்தப்படம் வெளிவருவதற்கு முன்பே டாக்டர் பட வாய்ப்பு கிடைத்து. இப்போது டாக்டர் வெளிவருவதற்கு முன்பாகவே சூர்யாவுக்கு ஜோடியாகும் வாய்ப்பும் கிடைத்துள்ளதால் தமிழில் ஒரு பெரிய ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !