உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சூர்யா 40க்கு இசை : டி.இமானுக்கு பிறந்த நாள் பரிசு

சூர்யா 40க்கு இசை : டி.இமானுக்கு பிறந்த நாள் பரிசு

சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கும் அண்ணாத்த படத்திற்கு இசையமைத்து வருகிறார் டி.இமான். இந்நிலையில், டி.இமானின் 38வது பிறந்த நாளான இன்றைய தினம் பிறந்தநாள் பரிசாக சூர்யா 40வது படத்திற்கு அவர் இசையமைக்கும் தகவலை அப்படத்தை தயாரிக்கும் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

சூரரைப்போற்று படத்திற்கு பிறகு சூர்யா நடித்து வரும் இந்த படத்தை பாண்டிராஜ் இயக்க, டாக்டர் படத்தில் நடித்துள்ள பிரியங்கா மோகன் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கும் தகவலும் வெளியிடப்பட்டுள்ளது. இதையடுத்து, டி.இமானுடன் சூர்யாவின் 40வது படம் மூலம் மூன்றாவது முறையாக பணியாற்றுவது மகிழ்ச்சி. அவருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் என டைரக்டர் பாண்டிராஜூம் ஒரு டுவீட் செய்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !