யாருக்கும் அதிகாரமில்லை- யுவனின் திடீர் அறிக்கை!
ADDED : 1684 days ago
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, பியார் பிரேம காதல் படத்தைத் தொடர்ந்து மாமனிதன், ஆலிஸ் ஆகிய படங்களை தயாரித்துள்ளார். இதில் மாமனிதன் படம் இன்னும் வெளியாகவில்லை. இந்நிலையில் தனது நிறுவனங்கள் குறித்து அவர் டுவிட்டரில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், பணம் மற்றும் ஒப்பந்தம் சம்பந்தமாக நான் யாருக்கும் எந்தவித அதிகாரமும் அளிக்கவில்லை. அதனால் என்னை தவிர, என் பெயரிலோ அல்லது எனது ஒய்எஸ்ஆர் பிரைவேட் லிமிடெட் மற்றும் யுஐ ரெக்கார்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனங்களின் பெயரிலோ யாராவது பணபரிவர்த்தனையில் ஈடுபட்டாலோ ஒப்பந்தம் போட்டுக்கொண்டாலோ அதற்கு நான் பொறுப்பல்ல என்பதை எனது நிறு வனங்களின் சார்பாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்துக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
எதற்காக இப்படி ஒரு அறிக்கை என்பதற்கான காரணம் தெரியவில்லை.