உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நயன்தாரா - விக்னேஷ் சிவன் போட்டோவிற்கு குவியும் லைக்ஸ்

நயன்தாரா - விக்னேஷ் சிவன் போட்டோவிற்கு குவியும் லைக்ஸ்

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி - நயன்தாரா நடித்த படம் நானும் ரெளடிதான். இந்த படத்தில் நடித்து வந்தபோது விக்னேஷ் சிவன்- நயன்தாராவுக்கிடையே காதல் மலர்ந்தது. கடந்த ஐந்து ஆண்டுகளாக காதலர்களாகவே வலம் வருகிறார்கள். வெளிநாடுகளுக்கு ஜாலி டூர் அடிப்பது, பிறந்தநாள் கொண்டாடுவது என்று தாங்கள் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு வருகிறார்கள்.

விக்னேஷ்சிவனும் நயன்தாரா குறித்த காதல் கவிதைகளையும் சோசியல் மீடியாவில் வெளியிட்டு தனது காதலின் தீவிரத்தை வெளிப்படுத்தி வருகிறார். இப்போது நயன்தாராவுடன் நெருக்கமாக எடுத்துக்கொண்ட ஒரு போட்டோவை வெளியிட்டுள்ளார் விக்னேஷ் சிவன். அதற்கு சில மணி நேரத்தில் லட்சங்களில் லைக்ஸ் கிடைத்துள்ளது. அதோடு பல அதிரடியான கமெண்டுகளையும் ரசிகர்கள் கொடுத்து வருகிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !