உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பழனிசாமி பாய்ஸ்

பழனிசாமி பாய்ஸ்

பிக்பாஸ் தமிழ் 4 நிகழ்ச்சியின் முக்கிய போட்டியாளராக கருதப்பட்டவர் நடிகர் ரியோ ராஜ். போட்டியின் வெற்றியாளராக வருவார் என எதிர்பார்க்கப்பட்ட அவர் இறுதியில் மூன்றாம் இடத்தை மட்டுமே பிடித்தார்.

இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளி வந்த பின்னர் ரியோ ராஜ் தனது நண்பர்களை சந்திப்பதற்காக சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள பிளாக்ஷீப் அலுவலகம் சென்றார். அப்போது அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

நண்பர்கள் அனைவரும் ஒன்று திரண்டு பட்டாசு வெடித்து ஆட்டோவில் வந்த ரியோவை உற்சாகமாக வரவேற்றனர். இந்த வீடியோவை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள ரியோ ராஜ் உங்களையெல்லாம் விட்டு இனி எங்கும் போக மாட்டேன்.. ஏன்னா அதுதான் உங்க தலையெழுத்து என மெசேஜ் தட்டியுள்ளார். மேலும் பழனிசாமிபாய்ஸ் என்ற ஹேஷ்டேகையும் அவர் பதிவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !