உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஆர்ஆர்ஆர் - முக்கிய அறிவிப்பு

ஆர்ஆர்ஆர் - முக்கிய அறிவிப்பு

ராஜமவுலி இயக்கத்தில் ஜுனியர் என்டிஆர், ராம்சரண், ஆலியா பட், அஜய் தேவகன், சமுத்திரக்கனி மற்றும் பலர் நடிக்கும் படம் ஆர்ஆர்ஆர். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்திய சுதந்திர போராட்ட காலக் கதையாக உருவாகி வரும் இப்படம் சுமார் 400 கோடி பட்ஜெட்டில் தயாராகி வருகிறது.

இதற்கு முன்பு சில முக்கிய நிகழ்வுகளில் இப்படம் பற்றிய அப்டேட்கள், வீடியோக்களை வெளியிட்டார்கள். நாளை(ஜன., 26) இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு படம் பற்றிய ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாக உள்ளது. அது என்ன என்பதற்கான அறிவிப்பு இன்று மதியம் 2மணியளவில் வெளியிடப்பட உள்ளது. இப்படத்தை இந்த ஆண்டு அக்டோபர் 8ம் தேதி தசரா பண்டிகையை முன்னிட்டு வெளியிடுவார்கள் எனத் தெரிகிறது. அது பற்றிய அறிவிப்புதான் நாளை வெளியாக வாய்ப்பு உள்ளது என்கிறார்கள்.

இந்த ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஆர்ஆர்ஆர் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !